இந்தியா

1.கேரளாவின் சட்டசபையில் மாநில பழமாக பலாப்பழம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.கேரளாவின் மாநில விலங்கு யானை, பறவை கிரேட் கார்ன்பில், மலர் கன்னிகோனா, மரம் தென்னை மற்றும் மீன் கரிமீன் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.உலகிலேயே மிகச்சிறிய அளவிலாக கம்ப்யூட்டரை உருவாக்கி ஐ.பி.எம். நிறுவனம் சாதனைப்படைத்துள்ளது.மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் 1 மி.மீ. நீளமும், 1 மி.மீ. அகலமும் கொண்டது.
2.கென்யாவில் லைகிபியா வன சரணாலயத்தில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டா மிருகமான சூடான் முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்தது.


விளையாட்டு

1.அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2.இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை (டி.ஆர்.எஸ்) முதல் முறையாக நடைமுறைப்படுத்தபடுவதாக ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக தண்ணீர் தினம்(World Water Day).
தண்ணீர்தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்றும் ஏதுமில்லை. தண்ணீர் வற்றாத செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு