Current Affairs – 22 June 2019
தமிழகம்
1.தமிழகம் முழுவதும் 82 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இந்தியா
1.வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களது பணியாளர்களின் பணிகள் தொடர்பான பதிவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
2.கோதாவரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார்.
3.மக்களவையில் முத்தலாக் நடைமுறை தடை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
வர்த்தகம்
1.லக்ஷ்மி விலாஸ் வங்கியை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான அனுமதியை இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) வழங்கியுள்ளதாக இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
2.ஜி.எஸ்.டி., கவுன்சில், 35வது கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், மின்வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைப்பது, ஜி.எஸ்.டி., பதிவுக்கு, ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், ஜி.எஸ்.டி., ஆண்டு வரித் தாக்கலுக்கான அவகாசத்தை, இரண்டு மாதங்கள் அதிகரித்து, ஆகஸ்டு, 30 வரை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உலகம்
1.ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
2.அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ உயர் அதிகாரி மார்க் எஸ்பரை அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.சீனியர் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2.பிரான்ஸில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கடைசியாக நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டங்களில் அமெரிக்கா, நெதர்லாந்து, கேமரூன், சிலி அணிகள் வெற்றி பெற்றன.
இன்றைய தினம்
- பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
- கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
- புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
- சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)
– தென்னகம்.காம் செய்தி குழு