தமிழகம்

1.தமிழக அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர்கள் 73 பேர் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

2.தமிழக காவல்துறையில் 1989-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு சோ்ந்தவா்கள், 10 ஆண்டு பணிக்கு பின்னர் காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். இதையடுத்து அவா்கள், 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்தப்பட்டனர்.


இந்தியா

1.உச்ச நீதிமன்ற நீதிபதியும், கொலீஜியம் குழு உறுப்பினருமான செலமேஸ்வர் இன்று ஓய்வு பெற உள்ளார்.

2.ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டது.


வர்த்தகம்

1. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, எஃகு பொருள்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட 29 வகையான பொருள்கள் மீதான வரியை இந்தியா அதிகரித்துள்ளது.

2.நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (எஸ்.இ.இசட்) ஏற்றுமதி சென்ற மே மாதத்தில் ரூ.29,263 கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம்

1.கனடா முழுவதும் வரைமுறைக்குள்பட்டு கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்வதற்கும், வாங்கிப் பயன்படுத்துவதற்கும் அனுமதியளிக்கும் சட்டம் வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


விளையாட்டு

1. ஸ்பெயினிடம் 1-0 என ஈரான் தோல்வியடைந்தது.ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

2.இந்தியா, பாகிஸ்தான், கொரியா, ஈரான், அர்ஜென்டினா, கென்யா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் துபை மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபையில் இன்று தொடங்குகிறது.


ன்றைய தினம்

 

  • பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
  • கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  • புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  • சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)

 

–தென்னகம்.காம் செய்தி குழு