Current Affairs – 22 July 2019
தமிழகம்
1.நாட்டிலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் எண்ணிக்கை 12 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.
2.சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.சௌம்யாவுக்கு வழங்கப்படுகிறது. எம்.எஸ்.ஷீலா மற்றும் சீதா நாராயணனுக்கு கலா ஆச்சார்யா விருது வழங்கப்படுகிறது.
இந்தியா
1.‘சந்திரயான்-2’ விண்கலம் பிற்பகல் 2.43 மணிக்கு, ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மைய இரண்டாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்கிறது.
2.அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை, ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் (நீதிபதிகள் தேர்வுக் குழு) பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
3.அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பாண்டு மே மாதம் வரையில் மொத்தம் ரூ.5,851 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
வர்த்தகம்
1.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7 சதவீதம் உயர்ந்துள்ளது.பின்னலாடை ஏற்றுமதியும் வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 12 ஆயிரத்து, 446 கோடி ரூபாயாக இருந்த, பின்னலாடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 13 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக, 5.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
உலகம்
1.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
2.தங்களது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது.
விளையாட்டு
1.செக்.குடியரசின் பிராக் நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திரம் ஹிமா தாஸ், ஓரே மாதத்தில் 5-ஆவது தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
2.இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகேன் எமகுச்சியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார் பி.வி.சிந்து.
3.கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சத்யன்-அர்ச்சனா இணை தங்கப் பதக்கம் வென்றது.
இன்றைய தினம்
- சர்வதேச பெற்றோர் தினம்
- காம்பியா மறுமலர்ச்சி தினம்
- விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது(1999)
- போலந்தில் மார்ட்டின் சட்டம் தடை செய்யப்பட்டது(1983)
- வைலி போஸ்ட், 15,596 மைல்களை 7 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்(1933)
– தென்னகம்.காம் செய்தி குழு