தமிழகம்

1.ஆக்ஸ்போர்டு, யாழ்ப்பாணம் உள்பட 4 பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கை நிகழாண்டுக்குள் தொடங்கப்படவுள்ளது என்று தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறினார்.

2.சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளில் ஒன்று சென்னையில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக மீன்வளம், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.


இந்தியா

1.இஸ்ரோவின் கிளைகளில் ஒன்றான, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதவியில் இருந்து டாக்டர் தபன் கே மிஸ்ரா நீக்கப்பட்டுள்ளார்.
அதற்குப் பதிலாக, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தின் ஆலோசகராக தபன் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1. சானிடரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ரூ.1000 வரையிலான மதிப்புள்ள காலணிகளின் மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.8 செ.மீ. அளவு வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், விடியோ கேம்கள், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏ.சி. இயந்திரங்கள், வாட்டர் ஹீட்டர், வேக்குவம் கிளீனர்கள், கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், முகச்சவர சாதனங்கள் ஆகிய பொருள்களின் மீதான வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவுக்கு எதிராக சீனா மறைமுகப் பனிப் போரில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அமைப்பான சிஐஏ-வின் கிழக்காசியப் பிரிவு துணை இயக்குநர் மைக்கேல் காலின்ஸ் கூறியுள்ளார்


விளையாட்டு

1.வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய அணி 1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவற விட்டது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், திரிஷா தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி காம்பவுண்ட் பிரிவில் 228-229 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸின் சோபி, அமெலி, சான்ட்ரா அணியிடம் தோல்வியுற்றது.

2.உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி துவக்க ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா டிரா செய்தது.


ன்றைய தினம்

  • சர்வதேச பெற்றோர் தினம்
  • காம்பியா மறுமலர்ச்சி தினம்
  • விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது(1999)
  • போலந்தில் மார்ட்டின் சட்டம் தடை செய்யப்பட்டது(1983)
  • வைலி போஸ்ட், 15,596 மைல்களை 7 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்(1933)

–தென்னகம்.காம் செய்தி குழு