தமிழகம்

1.தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக, 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

2.மாண்டிசோரி கல்வியை அடிப்படையாகக் கொண்ட எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளை சென்னை எழும்பூர் மாநில மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.


இந்தியா

1.உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (பிரவாசி பாரதிய திவஸ்) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி  தொடங்கி வைக்கிறார்.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.


உலகம்

1.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (54), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

2.நேபாளத்தில் ரூ.2,000, ரூ.500, ரூ.200 ஆகிய மதிப்பிலான இந்திய கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி தடை விதித்துள்ளது.

3.சீனாவின் மக்கள் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டில் 139.5 கோடியை எட்டியுள்ளது.


விளையாட்டு

1.ஆஸி. ஓபன் நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலேப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ்.

2.ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியும், கேப்டன் விராட் கோலியும் தங்கள் முதலிடங்களை தக்க வைத்துள்ளனர்.

3.நெதர்லாந்தின் விகான்ஸியில் நடைபெற்று வரும் டாட்டா ஸ்டீல் செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அபார  பெற்றார்.


ன்றைய தினம்

  • ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது(1984)
  • உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1952)
  • கொலம்பியா கிராமபோன், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1889)
  • சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது(1957)

– தென்னகம்.காம் செய்தி குழு