இந்தியா

1.63-வது ஜியோ-பிலிம்பேர் விருது விழா மும்பையில் நடைபெற்றது.இதில் 2017-ம் ஆண்டின் சிறந்த பாலிவுட் படங்கள், நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.சிறந்த நடிகைக்கான விருது வித்யா பாலனுக்கு வழங்கப்பட்டது.சிறந்த படத்துக்கான விருது ‘இந்தி மீடியம்’ திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குநருக்கான விருது ‘பரேலி கி பர்பி’ படத்தை இயக்கிய அஸ்வினி அய்யருக்கு வழங்கப்பட்டது.’இந்தி மீடியம்’ படத்தில் சிறப்பாக நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
2.தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்தை (வயது64) நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர் வரும் 23-ம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டதையடுத்து, காலியாக இருக்கும் தேர்தல் ஆணையர் பதவிக்கு முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் புறப்பட்டு சென்றது.அந்த விமானம் அதிவேகமாக பறந்து 5 மணி 13 நிமிடத்தில் சென்றடைந்தது. பொதுவாக இது 6 மணி 6 நிமிட நேரத்துக்கு லண்டனை சென்றடையும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை விட 53 நிமிடத்துக்கு முன்னதாக சென்றடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.


இன்றைய தினம்

1.1952 – உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (Comet) சேவைக்கு விடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு