தமிழகம்

1.விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் 24-இல் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் தொடக்கி வைக்க உள்ளனர்.

2.தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தைப் பிரித்து செருப்பாலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் வருவாய் வட்டமும், விளவங்கோடு வட்டத்தைப் பிரித்து கிள்ளியூர் வட்டமும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தைப் பிரித்து வத்திராயிருப்பு வட்டமும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறை வட்டமும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தைப் பிரித்து ஆர்.கே.பேட்டை வட்டமும் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்தியா

1.இந்திய முத்திரைத்தாள் சட்டம் – 1988-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

2.அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினருக்கு சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவும் மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

3.இந்தியாவில் இயக்கப்படும் அதிவேக ரயில்களில் ஒன்றான ராஜ்தானி விரைவு ரயில்களின் பயண நேரம் விரைவில் 1 மணி நேரம் குறைக்கப்படவுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் கோதுமை உற்பத்தி 2018-19 பயிர் பருவத்தில் முன்னெப்போதும் காணப்படாத வகையில் 10 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய வேளாண் ஆணையர் எஸ்.கே.மல்ஹோத்ரா வியாழக்கிழமை தெரிவித்தார்.

2.வருங்கால வைப்பு நிதி 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.


உலகம்

1.பிரிட்டனின் சர்வதேச நல்லாசிரியர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு, இந்திய நடிகையும், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு ஆசிரியையுமான ஸ்வரூப் ராவல் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2.தங்களுடன் ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால், அதன் உறுப்பு நாடுகளிடமிருந்து இறக்குமதியாகும் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விளையாட்டு

1.சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பையின் ஷ்ரேயஸ் ஐயர் 55 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.


ன்றைய தினம்

  • அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732)
  • சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)
  • ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)
  • வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)
  • எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)

– தென்னகம்.காம் செய்தி குழு