தமிழகம்

1.சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் காலமானார்.தமிழில் இலக்கியப் பத்திரிகைகள் தவிர, தினமணி கதிர், ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட  பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்த பிரபஞ்சன், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என 46 நூல்களை எழுதியுள்ளார்.

2.தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிப்பது, உலக முதலீட்டாளர் மாநாடு உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


இந்தியா

1.நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க, சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.


வர்த்தகம்

1.உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை நவம்பரில் 11.03 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில் 116.45 லட்சம் பயணிகள் விமான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

2.மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,119-ஆக நிர்ணயித்துள்ளது.


உலகம்

1.சீனா-இந்தியா இடையேயான நல்லுறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் மூலமாக முன்னேற்றப் பாதையில் செய்வதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்து, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றம் தொடர்பாக உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஜின்பிங் இவ்வாறு கூறியுள்ளார்.

2.சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.


விளையாட்டு

1.ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டியை மொத்தம் 350 கோடி பேர் கண்டு களித்ததாக பிஃபா தெரிவித்துள்ளது.


ன்றைய தினம்

பிறப்புக்கள்

1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (இ. 1708)
1853 – அன்னை சாரதா தேவி, (இ. 1920)
1887 – இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)

நிகழ்வுகள்

1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
1990 – மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.

  • தென்னகம்.காம் செய்தி குழு