இந்தியா

1.சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி வரும் ஜனவரி முதல் தகவல்கள் பறிமாறப்பட உள்ளன.
2.ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் (குஜராத், மராட்டியம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம்) வழங்கி வரும் டெலிகாம் சேவையை நிறுத்திவிடும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
3.மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் செல்போன் சேவையை ஏற்று நடத்த ஏர்டெல் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


விளையாட்டு

1.காமன்வெல்த் போட்டியை 2022-ம் ஆண்டு நடத்தும் வாய்ப்பை இங்கிலாந்தின் பர்மிங்காம் நகர் பெற்றுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று தேசிய கணித தினம்.
2.1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
3.1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு