தமிழகம்

1.ஏலகிரி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானைக் குறியீடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் ஆ. பிரபு, சு.சிவசந்திரகுமார், ஆய்வு மாணவர்களான பொ.சரவணன், ரா.சந்தோஷ் ஆகியோர் ஏலகிரி மலைச் சரிவில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் வனப் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையான குறியீட்டுடன் கூடிய பானை ஓடு மற்றும் பயன்படு பொருள்களைக் கண்டெடுத்துள்ளனர்.


இந்தியா

1.ரயில்கள், ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட நெகிழி பொருள்களுக்கு (பிளாஸ்டிக்) தடை விதிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தத் தடை, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

2.கேபினட் செயலராக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் ராஜீவ் கௌபா நியமிக்கப்பட்டார்.

3.போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட 63 விதிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

4.நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்கு வலம் வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின், சுற்றுவட்டப் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இஸ்ரோ விஞ்ஞானிகள் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.


வர்த்தகம்

1.நாட்டின், ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு ஆண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில்,5.7 சதவீதமாக இருக்கும் என, நோமுரா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.நாடு முழுவதும், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் இருந்து, ஜி.எஸ்.டி., குறித்த சர்வே, மேற்கொள்ளப்படுகிறது. சர்வே முடிவுகளை, மத்திய அரசின் பரிசீலனைக்காக, இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் சங்கம், தொகுத்து வழங்க உள்ளது.


உலகம்

1.இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2.ஜி-7 மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளார். அப்போது அவருடன், காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

3.ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை எவரெஸ்ட் பகுதிகளில் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் இந்திய ஆடவர் அணி பட்டத்தைக் கைப்பற்றியது. அதே போல் மகளிரணியும் சாம்பியன் பட்டம் வென்றது.

2.உலக பாட்மிண்டன் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பி.வி.சிந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • ரஷ்ய கொடி நாள்
  • சென்னை நகரம் உருவாக்கப்பட்ட தினம்(1639)
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)
  • 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தன(1864)
  • நெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது(1989)

– தென்னகம்.காம் செய்தி குழு