Current Affairs – 22 August 2018
தமிழகம்
1.தமிழக அரசு 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
2.சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தியா
1.7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.பிகார் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிகார் மாநிலத்துக்கு புதிய ஆளுநராக லால்ஜி தாண்டன் நியமிக்கப்பட்டார்.ஹரியாணா மாநிலத்துக்கு சத்யதேவ் நாராயண் ஆர்யா, உத்தரகண்ட் மாநிலத்துக்கு பேபி ராணி மௌரியா, சிக்கிம் மாநிலத்துக்கு கங்கா பிரசாத், மேகாலயா மாநிலத்துக்கு தத்தகட்டா ராய் மற்றும் திரிபுரா மாநிலத்துக்கு கப்தன் சிங் சோலாங்கி ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
2.ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வாபஸ் பெற்றுள்ளது.
வர்த்தகம்
1.மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வரும் ஆல்ட்டோ கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் கார்கள் என்ற பெருமையை அதே நிறுவனத்தின் டிஸைர் ரகக் கார்கள் பெற்றுள்ளன.
உலகம்
1.வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் கைவிடப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சா்வதேச அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரியும் அபிஷேக் வர்மாவும் தங்கம், வெண்கலம் என முறையே இரு பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள். ஆடவருக்கான 50 மீ. ரைஃபிள் பொசிஸன்ஸ் இறுதிச்சுற்றில் போட்டியிட்ட இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆசியப் போட்டியில் செபாக்டக்ரா விளையாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
இன்றைய தினம்
- ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
- டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
- ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
- ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)
- தென்னகம்.காம் செய்தி குழு