தமிழகம்

1.அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்குகிறது என தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.


இந்தியா

1.மக்களவைக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) 3-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 115 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

2.ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை விரைவில் ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.இந்திய அஞ்சல் துறை உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவில், எரிசக்தி, அடிப்படை கட்டமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், அன்னிய நிறுவனங்கள் கூட்டாக செயல்பட, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, என, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர குழுவின் கவுன்சிலர், ஆஷிஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.


உலகம்

1.இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 215 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

2.மத்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே இரு நாள் பயணமாக சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தார். அங்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ மற்றும் சீன வெளியுறவு அதிகாரிகளுடன் இந்திய-சீன உறவுகள் மேம்பாடு குறித்தும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா ஆதரவளிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3.உக்ரைன் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், எந்த அரசியல் அனுபவமும் இல்லாத நகைச்சுவை நடிகர் வொலோதிமீர் ஜெலன்ஸ்கி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

4.எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற்றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5.ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் மகளிர் 100 மீ ஓட்டத்தில்  டுட்டி சந்த் புதிய தேசிய சாதனை படைத்தார்.100 மீ. ஹீட்ஸ் பிரிவில் டுட்டி சந்த் 11.28 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார். மேலும் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார். தனது முந்தைய சாதனையான 11.29 விநாடிகளை அவர் முறியடித்தார்.

2.மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னினி சாம்பியன் பட்டம் வென்றார். அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் நடாலை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தார் போக்னினி.

3.ஆசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் லால்ரின்னுன்கா ஜெரேமி புதிய யூத் உலக மற்றும் ஆசிய சாதனையைப் படைத்தார்.
சீனாவின் நிங்போ நகரில் ஆசிய பளுதூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை ஆடவர் 67 கிலோ பிரிவில் 16 வயதே ஆன ரின்னுன்கா கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 297 கிலோ (134+163 கிலோ) தூக்கி புதிய யூத் உலக மற்றும் ஆசிய சாதனையைப் படைத்தார். அவர் மொத்தம் 6 சர்வதேச சாதனைகள், 9 தேசிய சாதனைகள் என 15 சாதனைகளை முறியடித்தார்.


ன்றைய தினம்

  • சர்வதேச புவி நாள்
  • ரஷ்ய புரட்சியாளர் விளாடிமிர் லெனின் பிறந்த தினம்(1870)
  • பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது(2006)
  • ஐரோப்பிய போர்ச்சுகீசியரான பேதுரோ கப்ரால் முதன் முறையாக பிரேசிலை கண்டார்(1500)

– தென்னகம்.காம் செய்தி குழு