தமிழகம்

1.இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.ஒரே நபருக்கு பல ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில், ஓட்டுநர் உரிமங்களின் தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்றை அரசு கட்டமைத்து வருவதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

2.இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா அப்தாலி தனது பதவியை  ராஜிநாமா செய்துள்ளார்.


வர்த்தகம்

1.பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மத்திய அரசு, சிறு சேமிப்புகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி, அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கு என்எஸ்சி, பிபிஎஃப் உள்ளிட்ட திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2.பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் பணிபுரிந்த 14 பொது மேலாளர்கள் செயல் இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


உலகம்

1.இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

2.வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தெரிவித்தார்.

3.பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மக்தூம் ஷா மஹ்முத் குரேஷியும் சந்திக்க உள்ளனர்.


விளையாட்டு

1.தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் புதிய தலைவராக விஜய் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் உள்பட அர்ஜுன, துரோணாச்சார்யா, தயான்சந்த், விருதுக்குரியவர்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

3.சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • உலக அமைதி தினம்
  • ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
  • மோல்ட்டார் விடுதலை தினம்(1964)
  • பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
  • பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகின ஐ.நா.,வில் இணைந்தன(1971)
  • தென்னகம்.காம் செய்தி குழு