தமிழகம்

1.தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் உள்ள 1,267 கி.மீ. தொலைவுள்ள கிராமச் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறை வசம் மாற்றப்படவுள்ளது. இதற்காக ரூ.895 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்தியா

1.மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

2.ரயில்வே வாரியத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையாக, அதிலுள்ள இயக்குநர் மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகளை மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கு மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

3.பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1.12 கோடி வீடுகளும் வரும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விடும் என்று மத்திய நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்.


வர்த்தகம்

1.திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா்.நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடன் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா்.


உலகம்

1.இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம், புவிசார் அரசியல் குறித்து தில்லியில் நடைபெறவிருக்கும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் இருநாட்டுத் தலைவர்கள், உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
“வளர்ச்சிக்கான கூட்டாளிகள்’ என்ற தலைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வியூகம் மற்றும் ஒத்துழைப்புக்கான மன்றம் (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) ஒருங்கிணைக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர்கள் ஹென்றி கெஸ்ஸிங்கர், கான்டலீஸா ரைஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

2.தொடா்ந்து 19 மணி நேரத்துக்கு தொடா்ந்து பயணிகள் விமானத்தை இயக்கி, ஆஸ்திரேலியாவின் க்வான்டஸ் ஏா்வேய்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான க்யூஎஃப்7879 விமானம், அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலிருந்து புறப்பட்டு, 19.16 மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. பயணிகள் விமானம் தொடா்ந்து இவ்வளவு நேரம் இயக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தய போட்டியில் இந்தியாவின் ரொனால்டோ தங்கமும், ஜேம்ஸ் சிங் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

2.ஐரோப்பிய ஓபன் ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே .


ன்றைய தினம்

  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
  • ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  • நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)

– தென்னகம்.காம் செய்தி குழு