தமிழகம்

1.வட கிழக்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையத்தின் 4-ஆவது உலைக்குத் தேவையான முக்கிய சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


இந்தியா

1.அமிருதசரஸ் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட ரயில் விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

2.சாகர்மாலா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தில் ரூ.2.35 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

3.மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான யுனிசெஃப் உலக மாநாட்டை வரும் டிசம்பர் மாதம் இந்தியா நடத்தவுள்ளது.

4.ஜம்மு-காஷ்மீர் மாநில நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில், 43 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற இடங்களை விட 18 இடங்கள் அதிகமாகும்.


வர்த்தகம்

1.தொடரும் ரூபாய் மதிப்பு சரிவால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 514 கோடி டாலர் (ரூ.35,980 கோடி) சரிவடைந்துள்ளது.

2.தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி இரண்டாவது காலாண்டில் ரூ.5,005.73 கோடி லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.அமெரிக்கா வழங்கும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

2.துருக்கியிலுள்ள தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொலை செய்யப்பட்டதை முதல் முறையாக சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது.

3.சிங்கப்பூர் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு துணை பிரதமர் டியோ சீ ஹீயனை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.


விளையாட்டு

1.டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தகுதி பெற்றார். ஆடவர் அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.


ன்றைய தினம்

  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
  • ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  • நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)
  • தென்னகம்.காம் செய்தி குழு