Current Affairs – 21 November 2018
தமிழகம்
1.எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து குழாய்கள் மூலம் பர்னஸ் ஆயிலை அகற்றும்போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இறுதிக்கட்டமாக புதன்கிழமை ஆய்வு நடத்தப்படவுள்ளது.
2.மியான்மரிலும், தென் ஆப்பிரிக்காவிலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் பயிற்றுவிக்கப்படவுள்ளது.
3.சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியா
1.சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமாக 74.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2.பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
3.ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டு வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அது தொடர்பாகத் தாக்கல் செய்த பதில் மனுவிலுள்ள தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
1.உலகளவில், திறமையானோரை உருவாக்குவதிலும், அன்னிய வல்லுனர்களை ஈர்த்து, தக்க வைப்பதிலும், இந்தியா 53வது இடத்தைப் பிடித்துள்ளது.சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஐ.எம்.டி., வணிக கல்வி மையம், ஆண்டுதோறும், உலகளவில் திறமையானோர் வளம் குறித்து, ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடுகிறது.இப்பட்டியலில், சுவிட்சர்லாந்து, தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
2.ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை விற்று ரூ.6,100 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
உலகம்
1.ஷியான்-6 செயற்கைக்கோள் மற்றும் 4 சிறிய வகை செயற்கைக்கோள்களை சீனா செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.
மார்ச்-2டி ராக்கெட் மூலம் அந்த செயற்கைக்கோள்கள் கான்ஸு மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
2.ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹெய்ம், தனது பதவியிலிருந்து விலகினார்.
3.உருக்கு, அலுமினியம் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்திருப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையீடு செய்துள்ளது.
4.இந்திய கடற்படைக்கு 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்காக, ரஷ்யாவுடன் ரூ. 3, 572 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
விளையாட்டு
1.உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு வீராங்கனை மேரி கோம், லவ்லினா போரோகைன் உள்பட 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- உலக ஹலோ தினம்
- உலக மீனவர்கள் தினம்
- உலக தொலைக்காட்சி தினம்
- வங்கதேச ராணுவத்தினர் தினம்
- இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)
- இந்திய விடுதலைக்கு பின் முதல் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(1947)
- இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணையான நைக் அபாச்சி ஏவப்பட்டது(1963)
- தென்னகம்.காம் செய்தி குழு