தமிழகம்

1.மா​நி​லம் முழு​வ​தும் கடந்த சில ஆண்​டு​க​ளாக பதி​வான 3 கோடி பிறப்பு – இறப்பு சான்​றி​தழ்​களை அர​சின் இணை​ய​த​ளப் பக்​கத்​தில் பதி​வேற்​றம் செய்​யும் நட​வ​டிக்​கை​களை பொது சுகா​தா​ரத் துறை மேற்​கொண்டு வரு​கி​றது.


இந்தியா

1.விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

2.உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நீக்கி அம்மாநில ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டார்.

3.புவிப் பரப்பை தெளிவாக படம் பிடித்து அனுப்ப உதவும் ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் புதன்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


வர்த்தகம்

1.கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்த இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) பரிந்துரைத்துள்ளது.

2.நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.


உலகம்

1.இந்தியாவின் புதிய தூதராக மொயினுல் ஹக்கை பாகிஸ்தான் அரசு  நியமித்தது.

2.ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிடி என்ற இந்திய தொண்டு நிறுவனம் 1 கி.மீ. தொலைவுக்கு மிக நீண்ட இஃப்தார் விருந்தை நடத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


விளையாட்டு

1.தென்கொரிய மகளிர் அணிக்கு எதிரான இருதரப்பு ஹாக்கி டெஸ்ட் தொடர் முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது இந்தியா.

2.சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் அகில இந்திய ஜூனியர் பாட்மிண்டன் ரேங்கிக் போட்டி  தொடங்குகிறது.

3.இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அரையிறுதிச் சுற்றில் உலக சாம்பியன் மேரி கோம்-சக வீராங்கனை நிஹாத் ஜரீனுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10 இந்திய வீரர்கள் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.


ன்றைய தினம்

  • சிலி கடற்படை தினம்
  • இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
  • பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)
  • பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1904)
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம்(1991)

– தென்னகம்.காம் செய்தி குழு