Current Affairs – 21 May 2018
தமிழகம்
1.ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டைகளை, அரசு இணைய சேவை மையங்களின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், மே-23ல் வெளியாகின்றன.
இந்தியா
1.பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
2.உலகின் செல்வச் செழிப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாம் இடம் பிடித்துள்ளது.உலக அளவில் செல்வச் செழிப்பு மிக்க நாடுகள் எவை என்பது தொடர்பான ஆய்வை ஏஎஃப்ஆர் ஆசிய வங்கி மேற்கொண்டது.
வர்த்தகம்
1.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இணையதளம் வாயிலாக நுழைவு இசைவு (விசா) வழங்கும் திட்டத்தின் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.1,400 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
உலகம்
1.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் பொருட்டு, அமெரிக்கப் பொருள்களை கூடுதலாக இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
2.நியூயார்க் காவல் துறையில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பெண் குர்சோச் கவுர், முதல் துணை அதிகாரியாக சேரவிருக்கிறார்.
விளையாட்டு
1.ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
2.தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸிடம் 1-4 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
இன்றைய தினம்
- சிலி கடற்படை தினம்
- இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
- பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)
- பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1904)
- இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம்(1991)
–தென்னகம்.காம் செய்தி குழு