தமிழகம்

1.மக்களவை தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

2.வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், 11 வகையான அடையாள ஆவணங்களைக் காண்பித்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்தியா

1.கோவாவில் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.


வர்த்தகம்

1.ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயரை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.

2.ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ள புதிய வரி விகிதம் தொடர்பான விதிமுறைகளுக்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.


உலகம்

1.கனடா எதிர்க்கட்சியின் வெள்ளைஇனத்தைச் சேராத முதல் தலைவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜக்மீத் சிங், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

2.உலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர், பாரீஸ், ஹாங்காங் ஆகிய மூன்று நகரங்கள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.’தி எக்கனாமிஸ்ட்’ என்னும் பொருளாதார இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.


விளையாட்டு

1.தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (SAFF) போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நேபாளத்தின் பீரட் நகரில் சாஃப் கால்பந்து கோப்பை நடைபெற்று வருகிறது.


ன்றைய தினம்

  • சர்வதேச காடுகள் தினம்
  • சர்வதேச இலக்கிய தினம்
  • தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
  • பஹாய் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது(1844)
  • டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது(1917)

– தென்னகம்.காம் செய்தி குழு