Current Affairs – 21 June 2019
தமிழகம்
1.தமிழக சட்டப் பேரவை வரும் 28-ஆம் தேதி கூடுகிறது. இதற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
2.சிவகங்கை அருகே 17 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இந்தியா
1.சர்வதேச யோகாதினத்தையொட்டி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
2.மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொலைபேசி சேவை மையம் (கால் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது.
3.மக்களவையில் முத்தலாக் நடைமுறை தடை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
வர்த்தகம்
1.வங்கிகளின் கடன் வழங்கல் மற்றும் டெபாசிட் திரட்டல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளிலுமே தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
2.முத்ரா திட்டத்தின் கீழ், தற்போது வழங்கப்பட்டு வரும், 10 லட்சம் ரூபாய் கடனை, இரு மடங்கு அதிகரித்து, 20 லட்சம் ரூபாயாக வழங்கலாம் என, ரிசர்வ் வங்கியின், நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
உலகம்
1.சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
2.இமய மலையிலிருந்து பனி உருகுவது கடந்த 2000-ஆம் ஆண்டைப் போல் இரண்டு மடங்காகியுள்ளதாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
விளையாட்டு
1.ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
2.ஸ்பெயினில் நடைபெற்று வரும் மல்லோர்கா மகளிர் டென்னிஸ் போட்டியில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
3.சீனியர் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான வால்ட் பிரிவில் இந்தியாவின் பிரணதி நாயக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்றைய தினம்
- சர்வதேச யோகா தினம்
- சர்வதேச இசை தினம்
- சர்வதேச மனிதநேய தினம்
- க்ரீன்லாந்து தேசிய தினம்
- ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்கினை வெளியிட்டது(1999)
- க்ரீன்லாந்து தன்னாட்சி பெற்றது (2009)
– தென்னகம்.காம் செய்தி குழு