Current Affairs – 21 June 2018
தமிழகம்
1.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (அய்மா’) சார்பில் அக்மி 2018′ என்ற பெயரிலான 13-ஆவது சர்வதேச மிஷின் டூல்ஸ்’ ஐந்து நாள் சர்வதேசக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்குகிறது.
2.தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1500 கோடி செலவில் அமைய உள்ளது.
3.குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.
இந்தியா
1.நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை அரவிந்த் சுப்ரமணியன் ராஜிநாமா செய்ய இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
2.டேராடூனில் இன்று நான்காவது சர்வதேச யோகா தினம்.கடந்த 2015ஆம் ஆண்டு முதல், ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வர்த்தகம்
1. இந்தாண்டு, மார்ச் வரையிலான ஐந்து காலாண்டுகளில், ஒட்டு மொத்த துறைகளின் கடன் வளர்ச்சி, 54.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 12.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
உலகம்
1. அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு, இந்தியாவைச் சோ்ந்த சுமார் 7,000 போ் விண்ணப்பித்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1. உலகக் கோப்பை 2018-இல் இருந்து மொராக்கோ அணியை வெளியேற்றியது போர்ச்சுகல் அணி.உருகுவே வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
2.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டது.9 தலைசிறந்த அணிகள் பங்கேற்கும் இந்த முதல் தொடர் 2019 ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 30-ஆம் தேதி முடிவடைகிறது.
இன்றைய தினம்
- சர்வதேச யோகா தினம்
- சர்வதேச இசை தினம்
- சர்வதேச மனிதநேய தினம்
- க்ரீன்லாந்து தேசிய தினம்
- ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்கினை வெளியிட்டது(1999)
- க்ரீன்லாந்து தன்னாட்சி பெற்றது (2009)
–தென்னகம்.காம் செய்தி குழு