தமிழகம்

1.தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் ரூ.4,860 கோடி செலவில் 24 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 82 ஆயிரம் தனி வீடுகள் கட்டப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

2.தமிழகத்தில் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை மூலம் வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

3.சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி தராவிட்டால், தானாகவே திட்ட அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் எனறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.


இந்தியா

1.காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.

2.மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச ஆளுநராக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆனந்திபென் படேல் பதவி வகித்து வந்தார். தற்போது அவர், உத்தரப் பிரதேச ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிகார் ஆளுநர் லால்ஜி தாண்டனை மத்தியப் பிரதேச ஆளுநராக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து காலியான பிகார் ஆளுநர் பதவியில் பாகு சௌஹானை அரசு நியமித்துள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்த பாஜக மூத்த தலைவரான ரமேஷ் பைஸ், திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரிபுரா ஆளுநர் பதவியில் ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.மருத்துவக் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவர வகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 22) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, கட்சியின் தேசியச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா பொறுப்பேற்கவுள்ளார்.


வர்த்தகம்

1.வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 111 கோடி டாலர் சரிவடைந்துள்ளது.

2.தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கியின் முதல் காலாண்டு லாபம் 18.04 சதவீதம் அதிகரித்துள்ளது.

3.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் ரூ.10,104 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.


உலகம்

1.நிலவில் மனிதர்கள் தடம் பதித்த 50-ஆவது ஆண்டு விழா அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஆகிய இரு நாஸா விண்வெளி வீரர்கள், கடந்த 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் இறங்கினர். பூமி அல்லாத இன்னொரு தரைப் பகுதியில் மனிதர்கள் தடம் பதித்தது அதுவே முதல் முறையாகும்.


விளையாட்டு

1.இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.இதில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை எதிர்கொண்ட சிந்து 21-19, 21-10 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

2.கஜகஸ்தான் அதிபர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சிறப்பை ஷிவ தாபா பெற்றார்.


ன்றைய தினம்

  • பெல்ஜியம் தேசிய தினம்
  • இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899)
  • ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)
  • லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)

– தென்னகம்.காம் செய்தி குழு