தமிழகம்

1.சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.தஹில் ரமணியை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.


இந்தியா

1.மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்,  விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.

2.உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம்.ஜோசப்பின் பெயரை கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ முதல் காலாண்டில் ரூ.2,120.8 கோடி லாபம் ஈட்டியது.


உலகம்

1.இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை தில்லியில் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2.ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக செல்லவிருக்கிறார். இந்தப் பயணம் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.


விளையாட்டு

1.ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.


ன்றைய தினம்

  • பெல்ஜியம் தேசிய தினம்
  • ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)
  • லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)

–தென்னகம்.காம் செய்தி குழு