தமிழகம்

1.தமிழக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்படும் மருந்துகளில் “பார் கோடு” (தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிடப்படுவதைக்ட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.


இந்தியா

1.கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடாதிபதியும், லிங்காயத் தலைவருமான சிவகுமாரசுவாமி  உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 111.

2.வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), மக்களவைத் தேர்தலில் பதிலி வாக்காளர்கள் மூலம் ஜனநாயகக் கடமையாற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் நிறைவேற்றும் முனைப்பில் மத்திய சட்ட அமைச்சகம் உள்ளது.


வர்த்தகம்

1.நான்காம் தொழிற்புரட்சியின் சவால்களை சந்திப்பதில், மற்ற நாடுகளை விட, இந்திய நிறுவனங்கள், சிறப்பான நிலையில் இருக்கின்றன என தெரிவித்துள்ளது, ‘டெலாய்ட்’ எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.


உலகம்

1.கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

2.உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானின் சாúஸா நொனாகா, ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
113 வயதாகும் நொனாகா, கடந்த 1905-ஆம் ஆண்டு பிறந்தவர். ஜப்பானின் ஹாக்கய்டோ தீவைச் சேர்ந்த அவர், உலகின் மிக வயதான மனிதராக கடந்த ஆண்டு ஏப்ரலில் கின்னஸ் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


விளையாட்டு

1.ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலீக் கெர்பர், மரியா ஷரபோவா ஆகியோர்  தோல்வியுற்று வெளியேறினர்.

2.மலேசிய மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார்.


ன்றைய தினம்

  • க்யூபெக் கொடி நாள்
  • இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன தனி மாநிலங்களாக்கப்பட்டன(1972)
  • அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது(1925)
  • உலகின் முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது(1954)

– தென்னகம்.காம் செய்தி குழு