Current Affairs – 21 January 2018
இந்தியா
1.சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் தடம் பதிக்கும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
2.மத்திய பிரதேச மாநில ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் போன்று மிகக் கடினமானது என்று சொல்லப்படும் ‘கேப் ஹார்ன்’ கடல் பகுதியை இந்திய மகளிர் கடற்படையினர் வெற்றிகரமாக கடந்தனர்.
இன்றைய தினம்
1.இன்று லெனின் நினைவு தினம் (Lenin Death Anniversary Day).
லெனினை உலகப் புரட்சியாளர் என்று அழைக்கிறார்கள். ரஷ்யப் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர். ரஷ்யாவில் பொதுவுடமை அரசை நிறுவினார். சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவி வகித்தார். இவர் சோவியத் மார்க்சியம் – லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டினை உருவாக்கினார். சமூகப் புரட்சியாளர் லெனின் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 இல் இயற்கை எய்தினார்.
–தென்னகம்.காம் செய்தி குழு