தமிழகம்

1.ஒசூர் வழியாக பெங்களூரு-சென்னை இடையே விமானத் தொழில் தடம் அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2.மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறையில் 140 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைப்போல மாநிலம் முழுவதும் 19 டி.எஸ்.பி.க்கள் (காவல் துணைக் கண்காணிப்பாளர்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

3.பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது.


இந்தியா

1.காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையை, ஜம்மு-காஷ்மீர் போலீஸாரிடமிருந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்றுக் கொண்டுள்ளது.

2.பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிவிக்கையை ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு, 2018 – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 7 சதவீதம் சரிவடைந்து, 3,349 கோடி டாலராக, அதாவது, 2.34 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

2.நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு சந்தை ஆண்டில், பிப்., 15 வரையிலான காலத்தில், 8.07 சதவீதம் அதிகரித்துள்ளது.


உலகம்

1.பிரெக்ஸிட் விவகாரத்துக்கு அதிருப்தி தெரிவித்து, பிரிட்டனில் ஆளும் பிரதமர் தெரசா மேவின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் 3 பேர் கட்சியிலிருந்து  விலகியுள்ளனர்.

2.புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் அரசு தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு மைய தலைவராக பிஎப்ஐ தலைவர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

2.விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.


ன்றைய தினம்

  • உலக தாய்மொழி தினம்
  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீஅன்னை பிறந்த தினம்(1878)
  • புரூசியக் கூட்டமைப்பு உருவானது(1440)
  • நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)
  • வங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருவாக்கப்பட்டது(1952)

– தென்னகம்.காம் செய்தி குழு