இந்தியா

1.விண்வெளி அறிவியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான இன்ஸ்டெல்லரை விட இஸ்ரோவின் சந்திராயன் – விண்கலத்தின் திட்ட செலவுகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.‘இன்ஸ்டெல்லர்’ என்ற ஹாலிவுட் படத்தின் பட்ஜெட் 1062 கோடி ரூபாய் ஆகும்.
2.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரெயில் நிலையம் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச தாய்மொழி தினம் (International Mother’s Language Day).
உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. தற்போது 3000 மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் பிப்ரவரி 21 அன்று கொண்டாடுகிறது.

–தென்னகம்.காம் செய்தி குழு