தமிழகம்

1.தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஜன.1-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு எடுத்துவரக்கூடாது என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்தியா

1.ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்து வருகின்றது.அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கலு காவல் நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் பே காவல் நிலையமும், மூன்றாவது இடத்தை மேற்கு வங்கத்தில் உள்ள பரக்கா காவல் நிலையமும் பெற்றுள்ளது.இதில், புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடத்தையும், தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.கர்நாடகா மாநிலம் குடரி ஐந்தாவது இடத்தையும், இமாச்சல பிரதேசம் மாநிலம் சோபல் ஆறாவது இடைத்தையும், ராஜஸ்தான் மாநிலம் லாகரி ஏழாவது இடத்தையும், உத்தரகண்ட் மாநிலம் முன்சரி ஒன்பாதவது இடத்தையும், கோவா மாநிலம் சர்ச்சோரம் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
2.பொருள்கள், சேவைகள் தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பப்படுகிறது.


வர்த்தகம்

1.நடப்பாண்டு நவம்பரில் இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி 84.9 லட்சம் டன்னாக இருந்தது. கடந்தாண்டு இதே கால அளவில் இந்த உற்பத்தி 86 லட்சம் டன்னாக காணப்பட்டது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் இந்தியாவின் உருக்கு உற்பத்தியானது 1.3 சதவீத சரிவை சந்தித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா நேற்று நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக, நவ்தேஜ் சர்னா அப்பதவியில் இருந்தார்.


விளையாட்டு

1.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, இந்திய ஆடவர் அணியின் முன்னாள் தொடக்க வீரர் டபிள்யூ.வி. ராமன் (53) நியமிக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • எப்-14 போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.(1970)
  • தென்னகம்.காம் செய்தி குழு