இந்தியா

1.மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கிலை நீக்க புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
2.நாட்டின் முதல் தேசிய ரெயில்வே பல்கலைக்கழகம் குஜராத் மாநிலம் வதோதராவில் அமைய உள்ளதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
3.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த ஸ்வந்தர் குமார் ஓய்வு பெற்ற நிலையில், தற்காலிக தலைவராக நீதிபதி யு.டி சால்வியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வரை இவர் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.2016-17-ம் ஆண்டிற்கான கால்பந்து வீரருக்கான சிறந்த விருது பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.


இன்றைய தினம்

1.1937 – உலகின் முதலாவது முழு-நீள இயங்குபடம் ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் வெளியிடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு