தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.240 கோடி மதிப்பிலான 57 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


இந்தியா

1.மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் உடல்நலக்குறைவால் காலமானார்.

2.நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

3.மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடுவதற்கு 11 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.தனது நடுத்தர தொலைவு ஏவுகணையொன்றை சோதித்துப் பார்த்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அத்தகைய ஏவுகணை சோதனைகளுக்குத் தடை விதிக்கும் அமெரிக்க-ரஷ்ய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இரு நாடுகளும் இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2.ஆளும் கூட்டணியில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜியுசெப்பே கான்டே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 முறை சாம்பியன் லின் டேனை தோல்வியடையச் செய்தார் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்.

2.விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த விருதுக்காகத் திறமையும், தகுதியும் கொண்டவர்களைத் தேர்வு செய்யும் பணி தில்லியில் நடைபெற்று வந்தது. 12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு, விளையாட்டு வீரர்களின் பெயர்களை விருதுக்காகப் பரிந்துரைத்தது.

வீரர்களின் பட்டியல்

1. ஜடேஜா (கிரிக்கெட்)
2. தஜிந்தர் பால் (தடகளம்)
3. முகமது அனாஸ் (தடகளம்)
4. பாஸ்கரன் (பாடி பில்டிங்)
5. சிங்லென்சனா சிங் (ஹாக்கி)
6. அஜய் தாக்குர் (கபடி)
7. கெளரவ் சிங் (மோட்டோர் ஸ்போர்ட்ஸ்)
8. சோனியா லதர் (குத்துச்சண்டை)
9. பிரமோத் பகத் (பாரா விளையாட்டு, பாட்மிண்டன்)
10. அஞ்ஜும் மொட்கில் (துப்பாக்கிச் சுடுதல்)
11. ஹர்மீத் ரஜுல் (டேபிள் டென்னிஸ்)
12. பூஜா தண்டா (மல்யுத்தம்)
13. பெளவாட் மிர்சா (குதிரையேற்ற பந்தயம்)
14. குர்ப்ரீத் சிங் (கால்பந்து)
15. பூணம் யாதவ் (கிரிக்கெட்)
16. ஸ்வப்னா பர்மன் (தடகளம்)
17. சுந்தர் சிங் (பாரா விளையாட்டு, தடகளம்)
18. சாய் பிரணீத் (பாட்மிண்டன்)
19. சிம்ரன் சிங் (போலோ)

3.ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய மகளிர், ஆடவர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.


ன்றைய தினம்

  • ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
  • ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
  • ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)

– தென்னகம்.காம் செய்தி குழு