Current Affairs – 21 August 2018
தமிழகம்
1.சீனாவில் நடைபெற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேச அளவிலான டெல்டா ஆட்டோமேஷன் போட்டியில் விஐடி மாணவர் குழு முதலிடம் பிடித்தது.
2.மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான 3 பேர் கொண்ட தேடல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தியா
1.கேரளத்தில் ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, அதிதீவிர இயற்கைப் பேரிடர்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
2.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
வர்த்தகம்
1.தர நிர்ணய நிறுவனங்கள், கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர்,
என்.எஸ்.விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார்.
உலகம்
1.துருக்கி தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரக நுழைவு வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு
1.ஆசியப் போட்டி மல்யுத்தம் மகளிர் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தீபக்குமார். அவரைத் தொடர்ந்து ஆடவர் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் லக்ஷய் ஷெரோன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.மகளிர் டென்னிஸ் நாக் அவுட் சுற்றில் வென்று இந்தியாவின் அங்கிதா ரெய்னா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்றைய தினம்
- ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
- டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
- ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
- ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)
- தென்னகம்.காம் செய்தி குழு