தமிழகம்

1.ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2.தமிழகத்தில் இதுவரை ரூ.213 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.


இந்தியா

1.ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட “இம்பால்’ போர்க் கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

2.போர் காலங்களில் தைரியமாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கும் வீர் சக்ரா விருதுக்கு இந்திய விமானப் படை, விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை பரிந்துரைத்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,488 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

2.மத்திய அரசு, ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு (ஏப்.23 வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

3.பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் கடந்த நிதியாண்டில் 13 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.


உலகம்

1.வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே  சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

2.இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரும் தொழிற்சாலை விபத்துகளில், போபால் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தும் ஒன்று என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போரோகைன், மணிஷா மென், தீபக், ரோகித், ஆஷிஷ்குமார் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

2.மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் இத்தாலி வீரர் பேபியா போகினி, செர்பிய வீரர் லஜோவிக் மோதுகின்றனர்.


ன்றைய தினம்

  • பிரேசீலியா, பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது(1960)
  • பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது (1944)
  • பாவேந்தர் பாரதிதாசன் இறந்த தினம்(1964)
  • ரோம் நகரம் அமைக்கப்பட்டது(கிமு 753)

– தென்னகம்.காம் செய்தி குழு