இந்தியா

1.சர்வதேச அளவில் செல்போன்கள் மூலம் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து சாம்ஸ்கோர் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு பட்டியலில் இந்தியா(89 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது.இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா (87 சதவீதம்), மெக்சிகோ (80 சதவீதம்), அர்ஜென்டினா (77 சதவீதம்), பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
2.இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்த நீதிபதி ராஜேந்திர சச்சார் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.


சிறப்பு செய்திகள்

பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் 

 • Jan 24- தேசிய பெண் குழந்தைகள் தினம்
 • Feb 2- தேசிய பெண்கள் தினம்
 • Feb 6- International day of zero tolerance to female genital multilation
 • Feb 11- சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்
 • Mar 8- சர்வதேச பெண்கள் தினம்
 • Apr 24- தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்
 • May 2nd sunday- உலக அன்னையர் தினம்
 • June 23- சர்வதேச விதவைகள் தினம்
 • Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்
 • Aug 1to7 – உலக தாய்ப்பால் வாரம்
 • Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
 • Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்
 • Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

ன்றைய தினம்

1.இன்று சர்வதேச வானவியல் தினம்(International Astronomy Day).
தொலைநோக்கிமூலம் கிரகங்கள், நிலாக்கள் மற்றும் வான் நிகழ்வுகளையும் அதன் வியப்பையும் அடித்தட்டு மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4ஆம் நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு