தமிழகம்

1.தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

2.மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக 1,800 மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


இந்தியா

1.முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

2.தில்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

3.ஒடிஸா கலை மற்றும் கலாசார கழகத்தின் தலைவராக, அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக்கை நியமித்து, மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

4.எச்.எம்.டி கைக்கடிகாரங்களின் அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய மையம் அமைக்க பொதுத் துறை நிறுவனமான எச்.எம்.டி. திட்டம் வகுத்துள்ளது.


வர்த்தகம்

1.அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், அவற்­றுக்­கான சுங்க வரி உயர்வை, மத்­திய அரசு விரை­வில் அறி­விக்க உள்­ளது.


உலகம்

1.வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய தனது ஏவுகணை சோதனை தளத்தை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மூட வட கொரியா ஒப்புக்கொண்டது.

2.ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, பிரதமர் நரேந்திர மோடியை  சந்தித்தார். சந்திப்பின் போது, இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பான உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.


விளையாட்டு

1.உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் அடுத்தடுத்த பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை சாஜன் பன்வால் படைத்துள்ளார்.
ஸ்லோவோக்கியாவின் டிநாவா நகரில் உலக ஜூனியர் மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

2.பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா  வெற்றி பெற்றது.


ன்றைய தினம்

  • தாய்லாந்து இளைஞர்கள் தினம்
  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிடப்பட்டது(1847)
  • துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
  • பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)
  • தென்னகம்.காம் செய்தி குழு