தமிழகம்

1.எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

2.பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தற்காலிக உறுப்பினராக வி.அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

2.செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு ஆண்டில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 5-10 சதவீதம் குறையும் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.

2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 43,971 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தை எட்டி மீண்டும் சாதனை படைத்துள்ளது.

3.பயணிகள் வாகன சில்லறை விற்பனை செப்டம்பா் மாதத்தில் 20.1 சதவீதம் சரிந்துள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.


உலகம்

1.லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பாலிமர் பிலிம்கள், டை எெலக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை (biaxially oriented polypropylene) எலெக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது. பேக்கரிகளில் பப்ஸ் தயாரிக்க, மாவு, பல அடுக்குகளாக மடிக்கப்பட்டு அழுத்தப்படும்.

அதைப் பார்த்து பாலிமர் பிலிம்களை பல அடுக்குகளாக, டை எலக்ட்ரிக் கெபாசிடர் சுற்றி, அதிக சேமிப்பு திறனுள்ள கருவியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக ராணி மேரி மைய விஞ்ஞானிகள் தலைமை டாக்டர் எமிலியானோ பிலோட்டி,( Dr Emiliano Bilotti)தெரிவித்துள்ளார்.

2.அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே உப்பு ஏரி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

3 பில்லியன் ஆண்டுகளுக்கு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல்
அகலமுள்ள பாறை படுகை ஒன்று இருந்ததாக ஆராய்ச்சியில் தெரியவந்தது. கடந்த 2012 முதல் நாசா கியூரியாசிட்டி ரோவர் மூலம் அதனை மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.

3.சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை, பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றைத் தடுக்க தவறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை சா்வதேச பணப் பரிவா்த்தனைக் கண்காணிப்பு அமைப்பான எஃப்ஏடிஎஃப் நீக்கியுள்ளது.


விளையாட்டு

1.ஜோஹா்: சுல்தான் ஜோஹா் கோப்பை இறுதிச் சுற்றில் கடைசி 3 விநாடிகளில் பிரிட்டனிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று பட்டத்தை இழந்தது இந்தியா.


ன்றைய தினம்

  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
  • கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)

– தென்னகம்.காம் செய்தி குழு