தமிழகம்

1.“கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

2.ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இதனை தடை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியா

1.அமைதி மற்றும் வளர்ச்சிக்கான “இந்திரா காந்தி விருது’, தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான “சிஎஸ்இ’-க்கு (அறிவியல்-சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.

2.வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக அந்த வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்தாமல் நிறுத்தி வைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.


வர்த்தகம்

1.ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை 2.5 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

2.நாட்டின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் நவம்பர் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் 15 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (ஐஎஸ்எம்ஏ) தெரிவித்துள்ளது.

3.சில்லரை முதலீட்டாளர்கள், மொபைல்போன் மூலம், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வசதியை, தேசிய பங்குச் சந்தையான – என்.எஸ்.இ., அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, ‘NSE goBID’ என்ற மொபைல்போன், ‘ஆப்’ உருவாக்கப்பட்டு உள்ளது.

4.மத்திய அரசு, அடுத்த வாரம், ‘சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்’ வெளியீட்டின் மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

5.ஜப்பானைச் சேர்ந்த நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர், கார்லோஸ் கோஸ்ன், நிதி முறைகேடு தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார்.

6.உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பதென்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.


உலகம்

1.இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒப்புதல் அளித்துள்ளன.

2.உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் “ஜிபிஎஸ்’ தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, சீனா உருவாக்கியுள்ள “பெய்டோ’ வழிகாட்டும் தொழில்நுட்பத்துக்கு (பிடிஎஸ்) வலு சேர்க்கும் வகையில், கூடுதலாக இரு செயற்கைக்கோள்களை அந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது.


விளையாட்டு

1.10-ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் சோனியா சஹால் (57 கிலோ), சிம்ரஞ்சித் கெளர் 64 கிலோ) பிங்கி ஜங்கரா (51 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2.ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்  அலெக்சாண்டர் வெரேவ்.


ன்றைய தினம்

  • யுனிசெஃப் குழந்தைகள் தினம்
  • வியட்நாம் ஆசிரியர் தினம்
  • மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)
  • உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)
  • ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல் மாற்றப்பட்டது(1923)
  • தென்னகம்.காம் செய்தி குழு