தமிழகம்

1.நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 77.62 சதவீத வாக்குகள் பதிவாகின. மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 13 வாக்குச்சாவடிகளில் ஒட்டுமொத்தமாக 84.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

2.தமிழகத்திலுள்ள 300-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

3.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


இந்தியா

1.மக்களவைக்கு இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2.கடந்த 4 மாதங்களில் முகநூல், கூகுள் போன்ற வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களை மேற்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் ரூ.53 கோடி செலவிட்டுள்ளன.


வர்த்தகம்

1.மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, அதன் பரிந்துரையை, ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.


உலகம்

1.எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கொள்முதலுக்குப் பிறகு, எஸ்-500 ரக ஏவுகணைகளை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கவிருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

2.ஈரானுடன் போரிட தாங்கள் விரும்பவில்லை என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஜூவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இத்தாலியின் சீரி ஆ(Serie A) கால்பந்து லீக் போட்டி சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

2.கோவையில் 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய இளையோர் கூடைப்பந்துப் போட்டியில் தமிழக மகளிர் அணி தில்லி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

3.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். அதே நேரத்தில் ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் முன்னணி வீரர்கள் ஜோகோவிச்-நடால் ஆகியோர் மோதவுள்ளனர்.

4.பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஜூனியர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா 4 வெண்கலப் பதக்கங்களைவென்றுள்ளது. சிறுவர் பிரிவில் ஆஷிக் கோஷ், ஆஷிஷ் ஜெயின், சிறுமியர் பிரிவில் சஹாயணி பன்டா, ஜூனியர் அணி உள்ளிட்டோர் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.


ன்றைய தினம்

  • கமரூன் தேசிய தினம்
  • ப்ளூடூத் வெளியிடப்பட்டது(1999)
  • குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)
  • உலகின் முதலாவது நவீன அட்லஸை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)

– தென்னகம்.காம் செய்தி குழு