Current Affairs – 20 May 2018
தமிழகம்
1.சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வில் மீண்டும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்தியா
1.கர்நாடக அரசியல் அரங்கில் புதிய திருப்பமாக, அந்த மாநில முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.கர்நாடகத்தில் ஆட்சியமைக்க வரும்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத)-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.
வர்த்தகம்
1.தமிழகத்தில், ‘இ – நாம்’ எனும், ஆன்லைன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை சந்தை மையத்தை, கூடுதலாக ஏழு இடங்களில் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகம்
1.இந்தியா – அமெரிக்கா இடையே, அதிநவீன ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கான, அடிப்படை ஒப்பந்தங்கள், விரைவில் கையெழுத்தாக உள்ளன.
2.இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை ஷியா மதப் பிரிவு தலைவர் முக்தாதா அல்-சாதர் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக ராஜிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம்
- கமரூன் தேசிய தினம்
- ப்ளூடூத் வெளியிடப்பட்டது(1999)
- குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)
- உலகின் முதலாவது நவீன அட்லஸை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)
–தென்னகம்.காம் செய்தி குழு