தமிழகம்

1.ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.


இந்தியா

1.கோவா சட்டப் பேரவையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. இது தொடர்பாக மாநில ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

2.ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.நாட்டின் முதல் லோக்பால் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

லோக்பால் நியமன விதிகள்: 

லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருந்திருக்க வேண்டும். லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம். அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரையில் ஆகும். லோக்பால் தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். லோக்பால் உறுப்பினருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான 2-வது இடைக்கால ஈவுத் தொகையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஐஓசி நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கு 2-வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.1,412 கோடியை வழங்கவுள்ளது.


உலகம்

1.சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம், காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் கார்பைன்டை ஆக்ஸைடை வெளியிடாத, தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருளை பெருமளவில் தயாரிப்பதற்கான ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிக்கல்-அயான் ஹைட்ராக்ஸைடால் செய்யப்பட்ட நேர் மின்முனையின் மேற்புறத்தில், நிக்கல் சல்ஃபைடு முலாம் பூசப்பட்டது.மின்பகுப்பின்போது அந்த நிக்கல் சல்ஃபைடு எதிர் மின்னூட்டம் பெறும். கடலிலுள்ள உப்பும் எதிர் மின்னூட்டம் பெறும். ஒரே வகை காந்தப் புலன்கள் ஒன்றையொன்று உந்தித் தள்வதைப் போல, ஒரே வகையிலான எதிர் மின்னூட்டம் பெற்ற உப்பை, நிக்கல் சல்ஃபைடு முலாம் உந்தித் தள்ளிவிடும். இதன் காரணமாக, நேர் மின்முனை மீது உப்பு ஒட்டிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அந்த வகையில், நேர் மின்முனையின் வாழ்நாள் பல மடங்கு நீடிக்கும்.

2.கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியில், பிரதமர் ஜான் ஹென்றி சியன்ட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.


விளையாட்டு

1.சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து இளம் இந்திய நட்சத்திரங்கள் லக்ஷயா சென், ரியா முகர்ஜி சாதனை படைத்துள்ளனர்.


ன்றைய தினம்

  • சர்வதேச மகிழ்ச்சி தினம்
  • சிட்டுக்குருவி தினம்
  • சர்வதேச ஜோதிட தினம்
  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)
  • சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது(1948)
  • பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது(1956)
  • ஐன்ஸ்டீன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்(1916)

– தென்னகம்.காம் செய்தி குழு