Current Affairs – 20 June 2019
தமிழகம்
1.அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜூலை 5-ஆம் தேதி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சொற்குவைத் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கூறினார்.
2.உலக அளவிலான மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
இந்தியா
1.ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆலோசனைகளை அளிப்பதற்கு குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2.தெலங்கானா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய 2 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகம்
1.வங்கி, ‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு, வங்கி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது.
2.முத்ரா திட்டத்தின் கீழ், தற்போது வழங்கப்பட்டு வரும், 10 லட்சம் ரூபாய் கடனை, இரு மடங்கு அதிகரித்து, 20 லட்சம் ரூபாயாக வழங்கலாம் என, ரிசர்வ் வங்கியின், நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
உலகம்
1.செய்தியாளர் கஷோகி படுகொலையில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ஆக்னஸ் கலாமர்ட் தெரிவித்துள்ளார்.
2.இலங்கையின் முதல் செயற்கைக்கோளான ராவணா-1 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3.எரீஸ் எனப்படும் மேஷ விண்மீன் குழாமில் அமைந்துள்ள குறு விண்மீனை சுற்றிவரும் இரு கோள்கள், பூமியை ஒத்த சூழலில் அமைந்துள்ளதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 12.5 ஒளிவருட தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கோள்களின் இயக்கத்தை 3 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்தில் சூரியனை அருகில் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கோள்களைப் போலவே, அவை இரண்டும் இயங்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
விளையாட்டு
1.ஸ்பெயினில் நடைபெற்று வரும் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் மரியா ஷரபோவா இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
2.பிஃபா மகளிர் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டங்களில் பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை வெற்றி பெற்றன.
இன்றைய தினம்
- உலக அகதிகள் தினம்
- அர்ஜெண்டீனா கொடி நாள்
- விக்கிமீடியா அமைப்பு உருவானது(2003)
- இந்திய சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்தது(1958)
- மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன(1960)
– தென்னகம்.காம் செய்தி குழு