தமிழகம்

1.நிகழ் நிதியாண்டில் (2018-19) ரூ.8,000 கோடிக்கு பயிர்க் கடன் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

2.ராமேசுவரத்திலிருந்து, கன்னியாகுமரிக்கு விரைவில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் தெரிவித்தார்.


இந்தியா

1.ஜம்மு – காஷ்மீர் ஆளும் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.


வர்த்தகம்

1. உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுடன் இணைய கல்வி சேவையை அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

2.ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது பிரான்ஸைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி நடத்திய ஆய்வில் மூலமாக தெரியவந்துள்ளது.


உலகம்

1. மேசிடோனியா நாட்டின் பெயரை வடக்கு மேசிடோனியா என்று மாற்றுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

2.உலகிலேயே மிக அதிக வயதான சுமத்ரா உராங்குட்டான் வகையைச் சேர்ந்த மனிதக் குரங்கு, ஆஸ்திரேலியாவிலுள்ள மிருகக் காட்சி சாலையில் தனது 62-ஆவது வயதில் இறந்தது.


விளையாட்டு

1. போலந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

2.ஸ்பெயினுக்கு எதிரான 5-வது ஹாக்கி டெஸ்ட்டில் இந்திய மகளிர் அணி 4-1 என அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

3.நாட்டிங்ஹாமில்  நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்களில் 481 ரன்களை குவித்து இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது. கடந்த 2016-இல் ஏற்கெனவே தான் படைத்திருந்த 444 ரன்கள் உலக சாதனையை இங்கிலாந்து அணியே மீண்டும் முறியடித்தது.


ன்றைய தினம்

  • உலக அகதிகள் தினம்
  • அர்ஜெண்டீனா கொடி நாள்
  • விக்கிமீடியா அமைப்பு உருவானது(2003)
  • இந்திய சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்தது(1958)
  • மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன(1960)

–தென்னகம்.காம் செய்தி குழு