தமிழகம்

1.நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டங்களைத் தொடர்ந்து செல்லுபடியாக்கும் வகையிலான சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

2.இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக தரவரிசைப் பட்டியலில், நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 25-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது என பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தார்.


இந்தியா

1.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடரிலேயே பெரும்பாலான எம்.பி.க்கள் முதல்முறையாக பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் 2-ஆவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

2.அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 4-ஆவது இடத்தில் இருப்பதாக “ரேசர் பே – தி ஈரா ஆஃப் ரைசிங் பின்டெக்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ஈரானுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை  சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பாரசீக வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த பதற்றம் அதிகரித்துள்ளது.


விளையாட்டு

1.கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவைக்காக சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், ஆஸி வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஹால் ஆஃப் பேமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2.காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

3.இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் பி.வி.சிந்து.


ன்றைய தினம்

  • மனிதன் நிலவில் இறங்கிய தினம்
  • சர்வதேச சதுரங்க தினம்
  • கொலம்பியா விடுதலை தினம்(1810)
  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)
  • யுகோஸ்லாவிய ராஜ்யம் உருவாக்கப்பட்டது(1917)
  • டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940)

– தென்னகம்.காம் செய்தி குழு