Current Affairs – 20 July 2018
தமிழகம்
1.புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யத் தேவையான வசதியை அனைத்து காவல் நிலையங்களிலும் 6 மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
2.அஞ்செட்டி அருகே வரலாற்று ஆய்வாளர்களால் 2,500 ஆண்டுகள் பழைமையான இசை பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
1.தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்புடன் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
2.நாடு முழுவதும் 2,400 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
1.டில்லியில் நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 30 – -40 பொருட்களின் வரி குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
2.டும் எதிர்ப்புக்குள்ளான, ‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதாவை திரும்பப் பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகம்
1.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
2.இஸ்ரேலை யூத நாடாக அறிவிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துஉள்ளது.
விளையாட்டு
1.பிரான்ஸ் சாட்வில்லே நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
2.பல்வேறு விளையாட்டுகளில் உள்ள பயிற்சியாளர்களுக்கு ஊதிய வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
3.ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
4.நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது.
இன்றைய தினம்
- மனிதன் நிலவில் இறங்கிய தினம்
- சர்வதேச சதுரங்க தினம்
- கொலம்பியா விடுதலை தினம்(1810)
- வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)
- யுகோஸ்லாவிய ராஜ்யம் உருவாக்கப்பட்டது(1917)
–தென்னகம்.காம் செய்தி குழு