தமிழகம்

1.அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்தார்.

2.தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர் விடமாகவும் தமிழகத்தை வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதும் இலக்காகும்.

3.தமிழக காவல்துறையில் 6 ஏடிஜிபிக்களை டிஜிபிகளாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.


இந்தியா

1.குஜராத் மாநிலத்தில், எல்&டி நிறுவனத்தின் சார்பில் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். “கே-9 வஜ்ரா’ என்ற வகையிலான பீரங்கிகள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,735 கோடி டாலராக (ரூ.27.81 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

2.தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.5,586 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு “ரோசா பார்க்ஸ்’ விருது வழங்கி அந்நாட்டு நாளிதழ் கெளரவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் நான்காம் சுற்றில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் உடன் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலேப் மோதவுள்ளார்.

2.மலேசிய மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார்.


ன்றைய தினம்

  • அமெரிக்க அதிபர்கள் பதவியேற்பு தினம்
  • முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)
  • பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாக பயன்படுத்த அமெரிக்க செனட் சபை அனுமதியளித்தது(1887)
  • வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)

– தென்னகம்.காம் செய்தி குழு