தமிழகம்

1.மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவோரை மாற்ற வேண்டுமென்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டனர்.

2.திருச்சி – கோவை வரை ரூ. 3,500 கோடியில் பசுமை வழி விரைவுச்சாலை அமைய உள்ளது என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.


இந்தியா

1.மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை தண்டனைக்குரியது என்ற அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2.மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர்  அறிவித்தனர்.


வர்த்தகம்

1.வாடகைக் கார் சேவை நிறுவனமான ஓலாவில், ஃபிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு செய்துள்ளார்.


உலகம்

1.புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா.வில் விரைவில் தீர்மானம் கொண்டு வருவதற்கு பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

2.மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்ப நிதி பெறுவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்துள்ள அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாகாண அரசுகள் வழக்கு தொடுத்துள்ளன.

3.ஒருநாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு வந்த சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.


விளையாட்டு

1.லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை விருது டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

2.பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை (ஸ்டேரன்ஜா 70-ஆவது போட்டி)இல் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கம் வென்றனர்.


ன்றைய தினம்

  • சர்வதேச சமூகநீதி தினம்
  • அருணாசலப் பிரதேசம், அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமானது(1987)
  • ஹவாய் தீவில் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது(1901)
  • தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்(1876)

– தென்னகம்.காம் செய்தி குழு