இந்தியா

1.கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் 57 அடி உயர பாகுபலி சிலை அமைந்துள்ள விந்தியகிரி மலைக்கு புதிய படிக்கட்டுகளையும், பொது மருத்துவமனையையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
2.பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனஞ்ஜெய் சவுஹான் என்ற திருநங்கை மாணவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் வரும் வியாழக்கிழமை டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் விருந்தில் கலந்து கொல்கிறார்.
3.மும்பையைச் சேர்ந்த தினேஷ் ஷிவ்நாத் உபாத்யா என்ற இளைஞர் சுமார் 400 கிராம் தக்காளி கூழ் கொண்ட முழு பாட்டிலை 25.37 வினாடிகளில் ஒரு சிறிய ஸ்டிரா மூலம் உறிஞ்சி உலக சாதனை படைத்துள்ளார்.
4.ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்த ஐதராபாத் கடைசி நிஜாமின் மகன் நவாப் பஸல் ஜா பஹதூர் காலமானார்.


இன்றைய தினம்

1.இன்று உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice).
உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு