தமிழகம்

1.தமிழக காவல்துறைக்கு புதிதாக 27 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீரில் கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த ஆளுநர் ஆட்சி புதன்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

2.ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

3.நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயிலை, சென்னை ஐசிஎஃப் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
ரயில்வே பொறியாளர்கள் தண்டவாளத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வசதியாகவும் ரயில் விபத்து ஏற்படும் சமயங்களில், உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்வதற்காகவும் இந்த ஆய்வு ரயில் பயன்படுத்தப்படும்.


வர்த்தகம்

1.கூகுள் இந்தியா நிறுவனம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ‘மை பிசினஸ்’ என்ற புதிய, செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2.சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ நிறுவனம், அதன் முதல் ஸ்மார்ட் ஓட்டலை, ஹாங்சோ நகரில் துவக்கி உள்ளது.

இந்த ஓட்டலில், வாடிக்கையாளர்களுக்கு அறையின் சாவியோ அல்லது கார்டோ கொடுக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, வாடிக்கையாளரின் முகத்தை வைத்தே அடையாளம் காணப்பட்டு, அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.


உலகம்

1.சிரியாவில் இருக்கும் தங்கள் நாட்டுப் படையினரை அமெரிக்கா வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.

2.சுவிட்சர்லாந்து நாட்டில் ஜனவரி 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.


விளையாட்டு

1.ஐரோப்பிய கால்பந்தில் அதிக கோல்கள் அடித்ததற்காக 5-ஆவது முறையாக தங்கக் காலணி விருதை வென்றார் பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி.


ன்றைய தினம்

  • சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம்
  • சோவியத்தின் முதலாவது ரகசிய காவல்துறையான சேக்கா அமைக்கப்பட்டது(1917)
  • கார்டிஃப், வேல்சின் தலைநகராக அறிவிக்கப்பட்டது(1955)
  • போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா., உடன்படிக்கை வியென்னாவின் கையெழுத்தானது(1988)
  • தென்னகம்.காம் செய்தி குழு