இந்தியா

1.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை விடுதலை செய்யப்படுகிறார்.
2.உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிக பெண் விமானிகள் இருப்பதாக விமான போக்குவரத்து துறையின் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
3.தேதிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார் தனது ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நேற்று ஓய்வு பெற்றார்.


உலகம்

1.நெதர்லாந்தில் நடந்த சர்வதேச ‘ஒலிம்பியாட்’ எனப்படும் அறிவியல் போட்டியில் பங்கேற்ற துபாயில் வசிக்கும் சென்னை மாணவர் கவுசிக் முருகன் (வயது 15) வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2.வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் 1.65 கோடி பேருடன் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.பிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் (International Human Solidarity Day).
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20இல் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு