தமிழகம்

1.தமிழகத்தில் 5 லட்சம் முதியோருக்குப் புதிதாக ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மேட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

2.பாரத சாரண-சாரணியர் மாநில மாநாடு 22 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வரும் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

3.தமிழகம் முழுவதும் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.


இந்தியா

1.மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான கொள்கை விரைவில் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2.பிகார் மாநில முன்னாள் முதல்வர் ஜகந்நாத் மிஸ்ரா (82) உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார்.

3.மருந்துகளை உற்பத்தி செய்தாலோ அல்லது இறக்குமதி செய்தாலோ, அந்த அட்டைகளின் மீது க்யூ-ஆர் கோடு எனப்படும் பிரத்யேகக் குறியீட்டை அச்சிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.ஸ்வீடனைச் சேர்ந்த வீட்டு உபயோக சாதனங்கள் நிறுவனமான ஐக்கியா, இந்தியாவில் முதல் முறையாகத் தனது ஆன்லைன் விற்பனையை மும்பை நகரில் தொடங்கியது.


உலகம்

1.பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்பதோடு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் தனது ஐந்துநாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி வரும் 22-ஆம் தேதி துவங்குகிறார்.

2.இலங்கை ராணுவத்தின் தளபதியாக சர்ச்சைக்குரிய ஃபீல்ட் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஷாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

3.லிதுவேனியா நாட்டின் பிரதமர் சாலியஸ் ஸ்கெவர்னலிசை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.


விளையாட்டு

1.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி தொடக்க சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சாய் பிரணீத், எச்.எஸ். பிரணாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும், மகளிர் பிரிவில் மடிஸன் கீய்ஸும் சாம்பியன் பட்டம் வென்றனர்.


ன்றைய தினம்

  • உலக கொசு ஒழிப்பு தினம்
  • நேபாள தந்தையர் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)
  • ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)
  • இலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)

– தென்னகம்.காம் செய்தி குழு